“பாஜகவுடன் சேர்ந்து இபிஎஸ் அரசியல் நாடகம்...” - அண்ணா பல்கலை. வழக்கில் அமைச்சர் ரகுபதி சாடல்

4 months ago 13

சென்னை: “கல்லூரி மாணவி சத்தியபிரியா கொலை வழக்கில் குற்றவாளிக்கு எப்படி விரைவாக அதிகப்பட்ச தண்டனையை இந்த அரசு பெற்றுத் தந்ததோ அதேபோல அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து விரைவான நீதியை இந்த அரசு பெற்று தரும்” என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும், தனது கள்ளக் கூட்டாளி பாஜகவுடன் சேர்ந்து அரசியல் நாடகம் நடத்தி வருகிறார் பழனிசாமி என்று அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி. திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் புகாரளித்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக தினமும் அவரது நடவடிக்கைகள் மாறி வருகின்றன.

Read Entire Article