திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடிகர் எஸ்.வி.சேகர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவர் கூறுகையில், பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்குவது நல்லது. பாஜவை அதலபாதாளத்தில் சொருகிவிட்டார்.
டெல்லியின் கட்டாயத்துக்காக பாஜ கூட்டணியை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டாலும், அதிமுக அடிமட்ட தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக கூட்டணி அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி. முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார். பாஜவில் ஒரு முஸ்லிம் எம்பி கூட இல்லாத நிலையில், எப்படி அவர்கள் முஸ்லிம்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பு. தமிழர்கள் அதை சொல்வதற்கு பெருமைப்படுகிறார்கள். நானும் திராவிடன் தான். தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி இருக்கிறது என்பதை சொல்ல கூச்சப்பட தேவையில்லை.
அண்ணாமலை வாயை திறந்தாலே பொய்தான் பேசுகிறார். பாஜவில் யாராவது உருப்படாவிட்டால் எப்படியாவது கவர்னராக்கி விடுவார்கள். கழுதை கெட்டால் குட்டிச் சுவரு என்பதைப் போல. ஒரு ஓட்டு கூட வாங்கவில்லையா, கவுன்சிலராக கூட ஜெயிக்கவில்லையா, அப்படி என்றால் அவரை கவர்னர் ஆக்கிவிடலாம் என்பதுதான் பாஜவின் மனோபாவம், என்றார்.
The post பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை எடப்பாடி ஏற்றுக்கொண்டாலும் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்: எஸ்.வி.சேகர் பேட்டி appeared first on Dinakaran.