பாஜகவினருக்கு ஒரு நீதி? மற்றவர்களுக்கு ஒரு நீதியா ?: மக்களவையில் எம்.பி. ஆ.ராசா கேள்வி

22 hours ago 1

டெல்லி: இந்திரா காந்தி பெயரை பாஜக எம்.பி. கூறும்போது அவைத் தலைவர் அமைதியாக இருந்தது ஏன் என்று ஆ ராசா கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் அதானி பெயரை காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறியதற்கு பாஜக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். வங்கிகள் சட்டத்திருத்தம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பேசியபோது பாஜகவினர் குறுக்கீடு செய்தனர். அவையில் உறுப்பினராக இல்லாதவர் பெயரை எதிர்க்கட்சியினர் கூறக் கூடாது என சபாநாயகர் கருத்து தெரிவித்தார். உறுப்பினராக இல்லாதவர்களின் பெயர்களைக் கூறி அமைச்சர்களும், பாஜக எம்.பி.க்களும் எதிர்க்கட்சியினரை குற்றம் சாட்டும்போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்? பாரபட்சம் இன்றி சபாநாயகர் நடக்க வேண்டும் என திமுக எம்.பி. ஆ.ராசா விவாதங்களால் மக்களவையில் கூச்சல் குழப்பம் நீடித்த நிலையில், இந்திரா காந்தி பற்றி பாஜக எம்.பி.க்கள் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

The post பாஜகவினருக்கு ஒரு நீதி? மற்றவர்களுக்கு ஒரு நீதியா ?: மக்களவையில் எம்.பி. ஆ.ராசா கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article