கந்தர்வகோட்டை, பிப். 8: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மங்கனூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிபணி துறை மூலம் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது மைய எண் இரண்டு ஊரில் உள்ள குளத்தின் கரை ஓரத்தில் அமைந்து உள்ளது.
இந்த மையத்தில் சுமார் இருபது குழந்தைகள் உள்ளனர். இந்த கட்டிடம் மிகவும் பழுது அடைந்த நிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். குளத்தில் தண்ணீர் இருப்பதால் குழந்தைகளை இந்த மையத்திற்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதாக ஊர் மக்கள் கூறுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட துறையினர் ஊரில் உள்ள பாதுகாப்பன இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மங்கனூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.