விராலிமலை, பிப். 8: அன்னவாசல் அருகே குளத்தில் மண் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அன்னவாசல் அடுத்துள்ள புல் வயல் ஊராட்சி முதலிப்பட்டி குளத்தில் கிராவல் மண் அள்ளி கொண்டிருப்பதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மண் அள்ளி கொண்டு இருந்த பொக்லைன் இயக்குனர் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநர் போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்து ஓடி தலைமறைவாகினர். இதையடுத்து பொக்லைன் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அன்னவாசல் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post அன்னவாசல் அருகே குளத்தில் கிராவல் மண் அள்ளிய பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.