பாஜக - அதிமுக கூட்டணி, திமுகவை விரட்டியடிக்கும் - எல்.முருகன்

5 hours ago 2

கோவை,

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,

"புதுக்கோட்டைக்கு திருமாவளவனுடன் சென்று அம்பேதர் சிலை திறந்து வைத்த உதயநிதி வேங்கை வயல் பக்கம் சென்றிருக்களாம். அரக்கோணம் பெண்மணிக்கு நடந்த சம்பவத்திற்க்கு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அரசியலுக்காக தான் முதல்வர் டெல்லி சென்றார் என்று மக்கள் எண்ணி கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். ஆட்சி முடியும் தருவாயில்தான் டெல்லி சென்றுள்ளார்.

பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாடு வர வேண்டியது. தமிழ்நாடு வராமல் உத்தரபிரதேசம் சென்றுள்ளது. இந்த அரசாங்கம் தமிழகத்தை பின்னோக்கி சென்றுள்ளது. திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக அதிமுக பாஜக கூட்டணி உள்ளது. யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை யாரையும் மிரட்டவும் அவசியமில்லை." என்று தெரிவித்தார்.

Read Entire Article