பாஜ நிர்வாகி அடித்துக்கொலை: ஊராட்சி தலைவர் மகனுடன் கைது; மற்றொரு மகனுக்கு வலை

4 weeks ago 7

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்தவர் விட்டல்குமார் (47), பாஜ ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவரை கடந்த 16ம் தேதி மாலை கே.வி.குப்பம் அடுத்த சென்னாங்குப்பம் பகுதியில் மர்மநபர்கள் இரும்பு ராடால் தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார். இதுதொடர்பாக தனிப்படையினர் நடத்திய விசாரணையில், கொலையில் ஈடுபட்டது நாகல் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(26), கீழ் ஆலத்தூரை சேர்ந்த கமலதாசன்(24) ஆகியோர் எனவும், கொலைக்கு தூண்டியது நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலாசேட்(55), அவரது மகன்களான வழக்கறிஞர் ராஜேஷ்(30), வருவாய் துறை கிராம உதவியாளர் தரணிகுமார்(28) ஆகியோர் என்று தெரியவந்தது.

நாகல் ஊராட்சியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாலை வசதி இல்லை. விவசாய நிலத்தில் மதுபாட்டில்கள், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது என்று விட்டல் குமார் ஊராட்சியின் மீது புகார்கள் கொடுத்து வந்ததால் கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான சந்தோஷ்குமார், கமலநாதன் நேற்று முன்தினம் காட்பாடி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார், சின்ன நாகல் மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த பாலாசேட், தரணிகுமார் ஆகிய 2 பேரை நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேஷை தேடி வருகின்றனர்.

The post பாஜ நிர்வாகி அடித்துக்கொலை: ஊராட்சி தலைவர் மகனுடன் கைது; மற்றொரு மகனுக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article