காட்டாங்கொளத்தூர் - தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில்கள் இயக்கம்

3 hours ago 2

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, காட்டாங்கொளத்தூர் - தாம்பரம் இடையே நாளை சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து ரயில்கள், பேருந்துகள், கார்கள் மூலமாக பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றனர். பொங்கல் பண்டிகைக்கு பிறகு, அவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். பெரும்பாலானோர் நாளை திங்கள்கிழமை (ஜன.20) காலை திரும்ப திட்டமிட்டுள்ளனர். அவர்களது வசதிக்காக, காட்டாங்கொளத்தூர் - தாம்பரம் இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Read Entire Article