பாஜ கூட்டணியில் இருந்தபோது தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுத்தவர் எடப்பாடி: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

3 weeks ago 4

மதுரை: பாஜ கூட்டணியில் இருந்தபோது, தமிழ்நாட்டின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி காவு கொடுத்தார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அடுத்தாண்டு ஏப். 2 முதல் 6ம் தேதி வரை மதுரையில் நடக்கிறது. இதையொட்டி, மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் நேற்றிரவு மதுரையில் நடந்தது. இதில், பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

பிரதமர் மோடியின் மோசமான நடவடிக்கைகளை கண்டித்து நாடு தழுவிய கண்டன இயக்கத்தை ஒரு வாரத்திற்கு நடத்த உள்ளோம். ஒரே நாடு, ஒரே தேர்தலால் மாநில சுயாட்சி பறிக்கப்படும். கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படும். கவர்னர் ரவியின் பதவிக்காலம் முடிந்தும், புதிய கவர்னரை இன்னும் நியமிக்கப்படவில்லை. மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் நபரை தான் கவர்னராக நியமிக்க வேண்டும். எங்களை ெபாறுத்தவரை கவர்னர் பதவியே தேவையில்லை.

திமுக தலைைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி போல அடிமை கூட்டணி இல்லை. அதிமுக-பாஜ கூட்டணியின்போது தமிழ்நாட்டின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி காவு கொடுத்தார். எடப்பாடி நினைப்பது போல திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கோரிக்கையை நிறைவேற்ற சொல்வதில் என்ன குழப்பம்? ஒன்றிய அரசை எதிர்த்து உறுதியாக போராடுவோம்’ என்றார்.

The post பாஜ கூட்டணியில் இருந்தபோது தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுத்தவர் எடப்பாடி: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article