பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடிக்கும் நானியின் 'ஹிட் 3' படம்

3 weeks ago 3

சென்னை,

பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹிட் 3'. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

பிரசாந்தி திபிர்னேனி தயாரித்துள்ள இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் முதல் நாள் வசூலில் மட்டும் உலக அளவில் ரூ. 43 கோடி வசூலித்து, நானியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில் 'ஹிட்3' படம் 2 நாட்களில் உலக அளவில் ரூ.62 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்து வருகிறது. இனிவரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

It is SARKAAR'S HUNT at the box office #HIT3 grosses 62+ CRORES WORLDWIDE in 2 days ❤Book your tickets now!️ https://t.co/T7DiAuhyZC#BoxOfficeKaSarkaar#AbkiBaarArjunSarkaarNatural Star @NameisNani @KolanuSailesh @SrinidhiShetty7 @komaleeprasad @MickeyJMeyerpic.twitter.com/cc4Rm19h4B

— Unanimous Productions (@UnanimousProds) May 3, 2025
Read Entire Article