பாக்.டிரோன்களை தாக்கி அழித்த எஸ்-400, பராக் -8, ஆகாஷ்

4 hours ago 2

இந்திய ராணுவத்தின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாத பாகிஸ்தான் காஷ்மீர், பஞ்சாப் என எல்லையோர மாநிலங்களின் எல்லை கிராமங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தி வருகின்றது.. மே 7ம் நள்ளிரவில் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பல ராணுவ இலக்குகளை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு, பராக் -8 மற்றும் ஆகாஷ் ஏவுகணைகள் மூலமாக பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இடைறித்து அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய ராணுவ படையை களமிறக்க அதிகாரம் பிராந்திய ராணுவத்தின் ஒவ்வொரு அதிகாரியும், பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்குவதற்கு அல்லது வழக்கமான ராணுவத்தை ஆதரிப்பதற்கு அல்லது வழக்கமான ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படுவதற்காக அழைப்பதற்கு ராணுவ தலைமை தளபதிக்கு ஒன்றிய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.

பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மே 6ம் தேதியிட்ட பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் ராணுவ விவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த உத்தரவானது 2025ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி முதல் 2028ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பாக்.டிரோன்களை தாக்கி அழித்த எஸ்-400, பராக் -8, ஆகாஷ் appeared first on Dinakaran.

Read Entire Article