பாகூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தந்தை சொத்தை போலி உயில் மூலம் மோசடி மகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

4 weeks ago 6

புதுச்சேரி, டிச. 20: புதுச்சேரியில் போலி உயில்கள் மூலம் கோயில் மற்றும் தனியார் நிலங்களை சிலர் பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதனடிப்படையில் புதுச்சேரி, உழவர்கரை, பாகூர் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 1980ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை 8 அசல் உயில் ஆவணங்களுக்கு பதிலாக, போலி உயில் ஆவணங்கள் தயார் செய்து, பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

இதுசம்பந்தமாக சிபிசிஐடி போலீசில் வழக்குபதிந்து, பலரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இந்நிலையில் பாகூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் சார்-பதிவாளர் ஜெய்சந்திரன் ஆய்வு செய்து வந்துள்ளார். அப்போது ஒரு உயிலில் இருக்கும் கைரேகை மற்றும் அலுவலகத்தில் உள்ள புத்தக பதிவேட்டில் உள்ள கைரேகை மறுபட்டதாக இருந்தது. தொடர்ந்து சார்-பதிவாளர் ஆய்வு செய்ததில் பொன்னுசாமி பெயரில் இருந்த சொத்துக்களை, அவரது மகன் சுந்தரமூர்த்தி தனது பெயருக்கு மாற்றி போலியாக உயில் தயாரித்து பதிவு செய்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சார் பதிவாளர் ஜெய்சந்திரன் இச்சம்பவம் குறித்து புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில், சுந்தரமூர்த்தி பொன்னாசி, அவரது தந்தை பெயரில் இருந்த சொத்துக்களை உடன்பிறந்தவர்களுக்கு வழங்காமல் இருக்க போலி உயில் தயாரித்தது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த சொத்துக்களை சுந்தரமூரத்தி அவரது பிள்ளைகளுக்கு ெகாடுத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் சுந்தரமூரத்தி பொன்னாசி, காந்திராஜ் பொன்னாசி, செந்தில்குமார் பொன்னாசி, ராமகிருஷ்ணன் பொன்னாசி மற்றும் அழகானந்தம் பொன்னாசி ஆகியோர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாகூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தந்தை சொத்தை போலி உயில் மூலம் மோசடி மகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article