பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்துக்குள் வெளியேற இந்தியா உத்தரவு

4 hours ago 3

புதுடெல்லி,

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே அவரை ஏற்றுக்கொள்ள முடியாதவர் என அறிவித்து உள்ளதுடன் அவரை 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தூதரக அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தூதரக ஊழியருக்கு தகவலை வழங்கியதாக பஞ்சாபை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article