
ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. ட்ரோன் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு வருகிறது. ஜம்முவில் இரவு முழுவதும் விளக்குகளை அணைத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி மற்றும் இணைய சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழித்தது இந்திய ராணுவம். குப்வாராவில் கடும் சண்டை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி வரும் நிலையில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மாவின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் எல்லை பகுதியிலும் இந்திய-பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்சல்மார் பகுதியில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன; ஜெய்சல்மாரில் இந்திய வான் பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் டிரோன்களை இடைமறித்து தாக்கினர்.