இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு - காதலன் மீது வழக்கு

2 hours ago 1

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பாப்பான்குளம் தெரு பகுதியை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் பாலகிருஷ்ணன் (வயது 24). இவரும் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண்ணும் கடந்த 2½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பாலகிருஷ்ணன் இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளார். அதில் இளம்பெண் கர்ப்பமானார். இதையடுத்து இளம்பெண், பாலகிருஷ்ணனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அதற்கு அவர் மற்றும் அவருடைய தந்தை கொளஞ்சி, தாய் காமாட்சி ஆகியோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும் காதலனின் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதையடுத்து இளம்பெண்ணின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பாலகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article