
இஸ்லாமாபாத்,
6 அணிகள் இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 போட்டி இன்று தொடங்கி மே 18-ந்தேதி வரை பாகிஸ்தானில் 4 நகரங்களில் நடக்கிறது.
ஐ.பி.எல். நடக்கும் சமயத்தில் பி.எஸ்.எல். லீக் நடப்பது இதுவே முதல் முறையாகும். ஐ.பி.எல். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் நிலையில் பி.எஸ்.எல். போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்க இருப்பதாக போட்டிக்கான தலைமை செயல் அதிகாரி சல்மான் நசீர் தெரிவித்துள்ளார்.
இது போட்டிக்கான சரியான சூழல் கிடையாது. என்றாலும் பி.எஸ்.எல். தங்களது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.