
லாகூர்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆதராவளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 82 பேர் லாகூரின் அடோலாக் சிறைக்கு வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.
சஞ்சனி சுங்கச்சாவடி அருகே வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது அந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை இம்ரான்கான் கட்சியினர் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.