ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகள்; ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு

7 hours ago 3

ராமநாதபுரம் பசும்பொன் புறநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த ஷேர் ஆட்டோ சாலையில் எதிரே வந்த போலீஸ் வாகனம் மீது மோதியது. இதில், 3 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய ராமநாதபுரத்தை சேர்ந்த செல்லப்பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்தை ஏற்படுத்திய செல்லப்பாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுர மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து செல்லப்பாண்டியன் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த கோர்ட்டு , குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டு வழங்கிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

ஷேர் ஆட்டோக்களில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகள் ஏற்றி சென்றால் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அதிக பயணிகளை ஏற்றி செல்லும் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இது தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். மேலும், இது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

Read Entire Article