கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி.20போட்டிக்கான கேப்டனாக பாபர் அசாம் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தள்ளார். இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகினார். சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அண்மையில் டி.20 உலக கோப்பையில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தால் மீண்டும் கேப்டன் பதவியில் இருந்துபாபர் விலகி இருக்கிறார்.இதுபற்றி அவர் தனது எக்ஸ் தள பதிவில், கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு எடுத்துள்ளேன். இதுகுறித்து கடந்த மாதமே, பிசிபி நிர்வாகத்திற்கும், அணி நிர்வாகத்திற்கும் கூறிவிட்டேன். இந்த அணியை வழிநடத்தியது பெருமையளிக்கும் விஷயம்.
ஆனால் இப்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் சூழலில் உள்ளேன், என தெரிவித்துள்ளார். கேப்டனாக 43 ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் செயல்பட்டதில் , 26ல் வெற்றி, 15 ல் தோல்வி அடைந்துள்ளது. 85 டி20 போட்டிகளில் 48 வெற்றி, 29 தோல்வி ண கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை மீண்டும் ராஜினாமா செய்த பாபர் அசாம் appeared first on Dinakaran.