புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இந்தியா தொடங்கி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்ற சூழலில் இந்திய விமானப்படை இன்று முதல் 2 நாள் பாகிஸ்தான் எல்லையில் மாபெரும் போர் பயிற்சியை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரபேல், சு-30, எம்கேஐ, மிக் 29, மிராஜ் 2000, தேஜாஸ், ஏவாக்ஸ், ஜாகுவார் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து முன்னணி போர் விமானங்களும் ஈடுபடும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய-பாகிஸ்தான் எல்லையின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் பெரும்பாலும் நடைபெறும் முக்கிய விமானப் போர் பயிற்சிக்காக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள், விமானப்படை வீரர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் போது, தரையிலும் வான்வெளியிலும் எதிரி இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்க பயிற்சி எடுக்கப்படும்.
The post பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை 2 நாள் போர் பயிற்சி: இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.