கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராணி (70). இவர், கடந்த 1972-73ம் ஆண்டு பியூசி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து அமெரிக்கா, பெங்களூரு போன்ற இடங்களில் வசித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்மூதாட்டி ராணியின் கணவர் இறந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்தவர், தனது படிப்பை தொடர முடிவு செய்துள்ளார். அதன்படி, தனித்தேர்வராக கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினார்.
இந்த தேர்வில் ராணி தேர்ச்சி பெற்று 346 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இதில், தமிழ் பாடத்தில் 89 மதிப்பெண் பெற்றுள்ளார். இது குறித்து மூதாட்டி ராணி கூறியதாவது: 1972-ல் பியுசி படித்தேன். பின்னர், தட்டச்சு கற்றுக்கொண்டேன். சிறிது காலம் சத்துணவில் பணியாற்றி உள்ளேன். பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என நினைத்தேன். இது குறித்து எனது மகன், மகளிடம் தெரிவித்தேன். அவர்கள், படிக்க சொல்லி எனக்கு ஊக்கம் அளித்தனர். சட்டம் படிக்க விரும்பினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post கல்விக்கு வயது தடையில்லை 70 வயது மூதாட்டி தேர்ச்சி appeared first on Dinakaran.