பாகிஸ்தானை தொடர்ந்து கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை

2 weeks ago 8

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நேற்று முன்தினம், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானை தொடர்ந்து கடற்பரப்பில் இந்தியாவும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள பதிவில்,"இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் கப்பலில் இருந்து கடல்சார் இலக்குகளை துல்லியமாகக் குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது நமது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் மற்றொரு மைல்கல்லாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#WATCH | Indian Navy's latest indigenous guided missile destroyer INS Surat successfully carried out precision cooperative engagement of sea skimming target marking another milestone in strengthening our defense capabilities.(Source: Indian Navy) pic.twitter.com/qs4MZTCzPS

— ANI (@ANI) April 24, 2025
Read Entire Article