பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் உறவு வேண்டாம் - இந்திய முன்னாள் வீரர் ஆவேசம்

2 weeks ago 4

மும்பை,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த செயலுக்கு விளையாட்டு பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் உறவு வேண்டாம் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இதனால்தான் நான் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் வேண்டாம் என்று சொல்கிறேன் இப்போது மட்டுமல்ல. ஒருபோதும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவு வேண்டாம். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை மத்திய அரசு அனுப்ப மறுத்தபோது, சிலர் விளையாட்டையும், அரசியலையும் கலக்கக்கூடாது என்று கூறினர்.

அது உண்மையா? இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம். அப்பாவி இந்தியர்களை கொல்வதுதான் பாகிஸ்தானின் தேசிய விளையாட்டாக தெரிகிறது. அவர்கள் இப்படித்தான் விளையாடுவார்கள் என்றால், நாமும் அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில் பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது. பேட்டுகள் மற்றும் பந்துகளால் அல்ல. உறுதியுடனும் கண்ணியத்துடனும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையுடனும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" என்று கூறினார். 

Read Entire Article