
டெல்லி,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
மேலும், இரு நாடுகளும் பரஸ்பரம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுடன் அனைத்து வகையான தபால் மற்றும் பார்சல் சேவையை இந்தியா நிறுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய துறைமுகங்களை பாகிஸ்தான் கப்பல்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.