பாகிஸ்தானில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் பலி

3 months ago 22

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி மாவட்டத்தின் மேகர்வால் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகர்வால் பகுதியில் நேற்று இரவு உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டைக்கு வழிவகுத்தது.

இந்த துப்பாக்கி சூட்டின் போது, 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேசமயம், 8 பேர் தப்பியோடினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் பயங்கரவாதிகளிடம் இருந்து 6 கையெறி குண்டுகள், 7 கலாஷ்னிகோவ்கள், துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article