பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்: தேவேந்திர பட்னாவிசுக்கு கூடுதல் பாதுகாப்பு

4 hours ago 2

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவரது அலுவலகத்தின் மீது குறிப்பாக தேவேந்திர பட்னாவிஸ் மீது தாக்குதல் நடத்த இருப்பதாக பாகிஸ்தான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து வாட்ஸ் அப் செயலியில் மிரட்டல் வந்தது.இதையடுத்து முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மும்பை போலீசார் அறிவுறுத்தினர். இந்த மிரட்டலை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிசுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மிரட்டல் விடுக்கப்பட்ட எண் குறித்து விசாரணை நடத்திய போது அதை அனுப்பியவரின் பெயர் 'மாலிக் ஷாபாஸ் ஹூமாயுன் ராஜ தேவ்' என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடந்த வாரம் மர்ம நபர் ஒருவரிடம் இருந்து இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். ஷிண்டேவின் காரில் வெடிகுண்டு வைக்க இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டது. கோரேகான், ஜே.ஜே. மார்க் போலீஸ் நிலையங்களுக்கும் தலைமை செயலகத்துக்கும் இந்த மெயில்கள் அனுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

Read Entire Article