பாகிஸ்தானில் அதிகரிக்கும் தொண்டை அடைப்பான் நோய்.. உயிர்காக்கும் மருந்து பற்றாக்குறையால் 100க்கும் அதிகமான குழந்தைகள் இறப்பு..!!

1 month ago 7

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் டிப்தீரியா நோய்க்கு 100க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரிணி பாக்டீரியம் டிப்தீரியே என்ற பாக்டீரியா இந்த நோய் ஏற்படுகிறது. இந்த கிருமிகள் தொண்டையை பாதித்து சுவாசத்தையும், உணவு விழுங்குவதையும் தடுப்பதால் தமிழில் தொண்டை அடைப்பான் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் 16 வயதுக்கு உட்பட குழந்தைகளும், வயதானவர்களுமே இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோயை குணப்படுத்த மருந்து பற்றாக்குறையால் பாகிஸ்தானில் 100க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக சிந்து மாகாண சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர்கள் மேலும் கூறும்போது, சிந்து தொற்று நோய் மருத்துவமனையில் கடந்த ஆண்டு 140 டிப்தீரியா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 52 பேர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தனர் என்று தெரிவித்தனர்.

மேலும், பாகிஸ்தானிய சுகாதார நிபுணர்கள் கூறுகையில்; கராச்சி உட்பட சிந்து மாகாணம் முழுவதும் உயிர் காக்கும் ஆன்ட்டி டாக்ஸின் மருந்து பற்றாக்குறை உள்ளது. ஒரு குழந்தையை குணப்படுத்த பாகிஸ்தானிய ரூபாயில் 2 லட்சத்து 50 ஆயிரம் தேவைப்படுகிறது. டிப்தீரியா பரவலை தடுக்க சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி பாதுகாப்பு இல்லாததால் அவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. எனவே இந்தப் பிரச்சினையில் அரசு தீவிர கவனம் செலுத்துவது அவசியம் என்றனர்.

The post பாகிஸ்தானில் அதிகரிக்கும் தொண்டை அடைப்பான் நோய்.. உயிர்காக்கும் மருந்து பற்றாக்குறையால் 100க்கும் அதிகமான குழந்தைகள் இறப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article