சென்னை,
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூலகத்தில் வெளியிட்டார்.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 25-ந்தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவே துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.