பா.ம.க நிறுவனர் ராமதாசை அவதூறாகப் பேசியதாக திருப்பத்தூரில் பா.ம.கவினர் சாலை மறியல்

2 months ago 10
பா.ம.க நிறுவனர் ராமதாசை, முதலமைச்சர் அவதூறாகப் பேசியதாகக் கூறி திருப்பத்தூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஹவுசிங் போர்டு பகுதியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு வெளியே வந்தவர்கள் போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் தடுத்தனர். இதையடுத்து போலீசாரின் தடுப்புகளையும் மீறி தருமபுரி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டும், சாலையில் படுத்துக்கொண்டும் பா.ம.கவினர் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
Read Entire Article