பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம் நீடிக்கிறாரா? வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பதில்

1 day ago 3

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை முடிவு செய்வதற்காக, கடந்த ஏப்ரல் 11-ந்தேதி சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேசிய ஜனநாயக கூட்டணியாக தேர்தலை சந்திப்போம். அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட போவதில்லை என்றார்.

1998-ல் இருந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வருகிறோம். இது இயல்பாக அமைந்த கூட்டணி. 2026-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் இருக்கும். தமிழ்நாட்டில் இணைந்துதான் ஆட்சியமைக்க போகிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைகிறது. தேர்தல் விஷயங்களில் இணைந்து செயல்படுவோம். வெற்றிக்கு பிறகு மற்றவை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி உருவான பின்னர், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பிற்கு உள்ள முக்கியத்துவம் பற்றி அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கத்திடம், சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அவர், எங்களை தவிர்க்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது பற்றி ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுபற்றி ஓ. பன்னீர் செல்வம் நாளை அறிவிப்பார் என கூறியுள்ளார்.

Read Entire Article