சென்னை: “பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.23) பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் இப்பேரவையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.