
சென்னை,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. இதனால், அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழலில் இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியுள்ளது.
இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, சென்னையின் மேற்கு மண்டலம் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி அரசு அலுவலகங்கள், புழல் சிறை, ஐ.சி.எப். போன்ற இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.