பஹல்காம் தாக்குதல் எதிரொலி காஷ்மீரில் பாதுகாப்பு கருதி 48 சுற்றுலா தலங்கள் மூடல்

4 hours ago 2

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் அமைந்துள்ள 48 பொது பூங்காக்கள், தோட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.

அதிகாரிகள் கூறுகையில், ‘‘சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு, காஷ்மீரில் மொத்தமுள்ள 87 பொது பூங்காக்கள், தோட்டங்களில் 48 மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே வரும் நாட்களில் மேலும் சில சுற்றுலா தலங்களும் மூடப்படலாம். தற்போது மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் காஷ்மீரின் தொலைதூரப் பகுதியில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் திறக்கப்பட்ட சில புதிய இடங்களும் இதில் அடங்கும்’’ என்றனர். தெற்கு காஷ்மீரில் உள்ள பல முகலாய தோட்டங்கள் மூடப்பட்டுள்ளன.

The post பஹல்காம் தாக்குதல் எதிரொலி காஷ்மீரில் பாதுகாப்பு கருதி 48 சுற்றுலா தலங்கள் மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article