ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாடும் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையை தொடர்ந்து 48 சுற்றுலா தலங்களை அம்மாநில அரசு மூடி இருக்கிறது. தற்போது காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தளங்கள் உள்ளன. அதில் 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தூத் பத்ரி, சிந்தன் டாப் உள்ளிட்ட பகுதிகளை நிரந்தரமாக மூடப்பட்டன. எஞ்சிய உள்ள சுற்றுலா தலங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்: பாதுகாப்பு படையினர் உத்தரவு!! appeared first on Dinakaran.