பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் – திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்!

3 hours ago 2

விழுப்புரம்: பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது. இதுகுறித்து தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (13.03.2025) காலை 9.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து நாளை பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும். இந்த 2 ரயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும். என்று கூறப்பட்டுள்ளது.

 

The post பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் – திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்! appeared first on Dinakaran.

Read Entire Article