சேந்தமங்கலம், அக்.19: எருமப்பட்டி ஒன்றியம், வடவத்தூரில் தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலுக்கு ₹2 கோடியில், பக்தர்கள் கிரிவலம் செல்ல பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தலைமலை அடிவாரம் வரதராஜபுரம் பகுதியில், சேவா டிரஸ்ட் சார்பில் 62வது பவுர்ணமி கிரிவல யாக பூஜை நடைபெற்றது. அடிவாரத்தில் உள்ள சஞ்சீவிராய பெருமாள் மற்றும் மகாலட்சுமி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மலையைச் சுற்றி 27 கி.மீ., தூரம் கிரிவலம் சென்ற பக்தர்களை மாதேஸ்வரன் எம்.பி., பொன்னுசாமி எம்எல்ஏ ஆகியோர் வரவேற்று, சால்வை அணிவித்தனர். ஒன்றிய திமுக செயலாளர் பாலசுப்பிரமணியம், எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அக்னி ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பவுர்ணமி கிரிவல பூஜை appeared first on Dinakaran.