பவானிசாகர் அருகே தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடு, சேவலை திருடி செல்லும் வீடியோ வைரல்

3 months ago 12

சத்தியமங்கலம் : பவானிசாகர் அருகே தோட்டத்தில் கட்டி வைத்திருந்த வெள்ளாடு மற்றும் ஒரு சேவலை இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் பட்டப் பகலில் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (50). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகள் மற்றும் கோழி வளர்த்து வருகிறார். தோட்டத்து சாலை அருகே இரண்டு வெள்ளாடுகளை கட்டி வைத்துவிட்டு தோட்டத்துக்கு சென்றிருந்த நிலையில் ஸ்கூட்டரில் வந்த 3 இளைஞர்கள் கட்டி வைத்திருந்த ஒரு வெள்ளாடு மற்றும் ஒரு சேவலை திருடிச் செல்லும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், இருசக்கர வாகனத்தில் வரும் 3 நபர்களில் ஒருவன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து தயாராக வைத்திருக்க 2 பேர் ஆளுக்கு ஒரு புறமாக சென்று கட்டி வைத்திருந்த வெள்ளாடு மற்றும் சேவல் திருடி கொண்டு ஸ்கூட்டரில் தப்பிச்செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விவசாயி நாகராஜ் பவானிசாகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பவானிசாகர் அருகே தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடு, சேவலை திருடி செல்லும் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article