சென்னை: அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் திணறி வரும் திமுக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டாலின் மாடல் அரசு 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மேலும், ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறை ஏவல் துறையாக மாறி, திமுக நிர்வாகிகள் செய்யும் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் கூட பாரபட்சம் காட்டுகின்றன.