பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா

4 months ago 17

 

பவானி, டிச. 9: பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோயில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த 4ம் தேதி கணபதி பூஜையுடன் நன்னீராட்டு விழா தொடங்கியது. தொடர்ந்து, ஆறு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று அதிகாலையில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு செய்யப்பட்டது. இதனை, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர சுவாமி கோயில் அர்ச்சகர் ராஜப்பா குருக்கள் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.

தொடர்ந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ, திருப்பணி ஒருங்கிணைப்பாளர் பிரபாத் சி.மகேந்திரன், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், திமுக நகர செயலாளர் நாகராஜன், அதிமுக நகரச் செயலாளர் சீனிவாசன், திமுக வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் தவமணி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் திருப்பணிக்குழு, அனைத்து சமுதாய கட்டளைதாரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவைத் தொடர்ந்து, மண்டல பூஜை நடைபெற உள்ளது.

The post பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article