பவன் கல்யாண் பாடிய "ஹரி ஹர வீரமல்லு" படத்தின் பாடல் படப்பிடிப்பு வீடியோ வெளியானது

1 week ago 1

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.

இவர் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'கேட்கணும் குருவே' என்று தொடங்கும் முதல் பாடலை நடிகர் பவன் கல்யாண் பாடியுள்ளார்.

இந்நிலையில், பவன் கல்யாண் பாடிய பாடலின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

The man behind the powerful vocals of #HariHaraVeeraMallu's first single! Here's the BTS video of #HHVM 1st Single Out Now - https://t.co/OgJ0noN0yiSung by One and Only, POWERSTAR @PawanKalyan garu in Telugu A @mmkeeravaani Musical pic.twitter.com/YYzqPLGGW3

— Mega Surya Production (@MegaSuryaProd) January 29, 2025
Read Entire Article