ஆர்.சி.பி. அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதார்: விராட் கோலி கூறியது என்ன..?

4 hours ago 2

பெங்களூரு,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். 2025ஆம் ஆண்டுக்கான சீசனுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி). அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி, ரஜத் படிதார் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, ஷேன் வாட்சன், ராகுல் டிராவிட், விராட் கோலி, பாப் டூ பிளசிஸ் என நீண்ட வரிசை கேப்டன்களுக்கு பிறகு ஆர்.சி.பி. அணியை வழிநடத்தும் வாய்ப்பை ரஜத் படிதார் பெற்றுள்ளார். .

இந்நிலையில் ஆர்.சி.பி. அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய விராட் கோலி, "நானும் மற்ற அணி வீரர்களும் உங்களுக்குப் பின்னால் இருப்போம் ரஜத்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், "இந்த அணியில் நீங்கள் வளர்ந்த விதத்தாலும்ம், செயல்பட்ட விதத்தாலும் அனைத்து ஆர்.சி.பி. ரசிகர்களின் இதயங்களிலும் நீங்கள் ஒரு இடத்தைப் பிடித்துள்ளீர்கள். இது உங்களுக்கு மிகவும் தகுதியானது" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2013 முதல் 2021ம் ஆண்டு வரை ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக கோலி தலைமை தாங்கினார். பின்னர் 2022 முதல் 2024 வரை பாப் டூ பிளசிஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக டூ பிளசிஸ் விளையாட உள்ளார். ஆர்.சி.பி. அணிக்காக கோலி சிறப்பான சாதனைகளை படைத்திருந்தாலும், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு அடுத்தபடியாக, 143 போட்டிகளில் ஒரு அணியை வழிநடத்திய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றுள்ளார். ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 68 வெற்றிகளையும், 70 தோல்விகளையும், 4 டிராவையும் கோலி தனது கேப்டன்சியில் பெற்றுள்ளார்.

2016-ம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு ஆர்.சி.பி.யை அழைத்துச் சென்றதுடன், அந்த சீசனில் 973 ரன்கள் குவித்து இன்று வரை முறியடிக்கப்படாத சாதனையை படைத்துள்ளார். 2024 ஐ.பி.எல். தொடரில் 154 ஸ்டிரைக் ரேட்டில் 741 ரன்கள் குவித்து அசத்தினார்.

Read Entire Article