
சென்னை,
பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடலான 'தே கால் ஹிம் ஓஜி' என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.