‘பழையன கழிதலும்... புதியன புகுதலும்...’ - தனது எக்ஸ் தள பதிவுக்கு மருத்துவர் ராமதாஸ் விளக்கம்

6 months ago 23

விழுப்புரம்: பழையன கழிதலும்... புதியன புகுதலும் என்று அண்மையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தார். இது பல்வேறு விமர்சனங்களையும் ஊகங்களையும் கிளப்பியது. ராமதாஸ் கூட்டணி மாறப் போவதாகவும் சிலர் பேச ஆரம்பித்தார்கள். இந்த நிலையில், அந்தப் பதிவுக்கான விளக்கத்தை ராமதாஸ் இன்று அளித்தார்.

இது தொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது, “தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆந்திரா, பிஹார், ஒடிசா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவில் நடத்தப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடத்தும் நாடகம் அம்பலமாகி, திமுக சொல்லும் சமூகநீதி என்ற முகமூடி கிழிந்துள்ளது. பொய்கள் மூலம் அரசு மக்களை ஏமாற்ற முடியாது.

Read Entire Article