ஈரோடு,மே12: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரிசி,நெல் மூட்டைகள்,கோதுமை உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான நேற்று ரயில் மூலமாக மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 42 பெட்டிகளில் 2,600 கிலோ புழுங்கள் அரிசி மூட்டைகள் ஈரோடு ரயில் நிலையத்தை வந்தன. இதையடுத்து, அவை லாரிகளின் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு கொண்டுசெல்லப்பட்டன. அதன்பின் அவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
The post மத்திய பிரதேசத்தில் இருந்து 2.6 டன் அரிசி ஈரோடு வந்தது appeared first on Dinakaran.