திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் ‘ரோடு ஷோ’ - ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு

4 hours ago 3

திருச்சி: திருச்​சி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று சுமார் 6 கி.மீ தொலை​வுக்கு ‘ரோடு ஷோ’ நடத்​தி​னார். அப்​போது சாலை​யின் இரு​புற​மும் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் திரண்டு முதல்​வருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். மேலும், புத்​தூர் பகு​தி​யில் அமைக்​கப்​பட்​டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை திறந்து வைத்​தார்.

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 2 நாள் பயண​மாக நேற்று திருச்சி வந்​தார். பின்​னர், துவாக்​குடி அரசு மாதிரி பள்​ளி கட்​டிடத்தை திறந்து வைத்த முதல்​வர், டிவிஎஸ் டோல்​கேட் பகு​தி​யில் உள்ள விருந்​தினர் மாளி​கை​யில் ஓய்வு எடுத்​தார். பின்​னர், மாலை 5.30 மணி​யள​வில் அரசு விருந்​தினர் மாளி​கையி​லிருந்து புறப்​பட்​டார். டிவிஎஸ் டோல்​கேட் சந்​திப்​பிலிருந்து குட்​ஷெட் மேம்​பாலம் வரை அரை கி.மீ தொலை​வுக்கு நடந்து சென்​றார். அப்​போது, சாலை​யின் இரு​புற​மும் திரண்​டிருந்த மக்​கள் அவருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பின்​னர், அங்​கிருந்து காரில் ஏறி தலைமை அஞ்​சல் அலு​வல​கத்​தில் இறங்​கி​னார்.

Read Entire Article