கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

3 hours ago 3

சென்னை: கல்வி நிறுவனம், குழுமங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தால் அனுமதி கட்டணம் வசூலித்து நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சிகள் எதற்கும் கேளிக்கை வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்க சட்டங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதிக் கட்டணத்தின் மீது 10 சதவீதம் கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிவகை செய்ய அரசு முடிவெடுத்திருந்தது.

Read Entire Article