பழவேற்காடு பகுதியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

3 months ago 24

பொன்னேரி: பழவேற்காடு மீனவப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு சுய தொழில் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சுயதொழில் பயிற்சிகள் இந்தியன் வங்கி சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோட்டைக்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த 35 பெண்களுக்கு 30 நாட்கள் பயிற்சி அளிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியினை திட்ட இயக்குனர் இளங்கோ, பழவேற்காடு இந்தியன் வங்கி மேலாளர் பிபின் பவுல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில், பழவேற்காடு பகுதியானது மீன்பிடித் தொழிலைத் தவிர மற்ற தொழில்களில் பின்தங்கிய பகுதியாகும். இங்கு பொதுவாக பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை.

அவ்வாறு செல்ல வேண்டுமானாலும் சென்னை, கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று நீண்ட தூர பயணத்திற்கு பின்பு கடினமான முறையில் பணி செய்து வருகின்றனர். அதனால் சுய தொழில்கள் மூலம் பெண்கள் கூட்டு முயற்சியோடு இங்கு தொழில் தொடங்கினால் வீட்டிற்கு அருகிலேயே சுய வருமானத்தை ஈட்ட முடியும் என்று பேசினர். அப்போது பயிற்சியாளர்கள் சீதாராமன், கஜலட்சுமி, அறக்கட்டளை செயலர் முத்து, ஒருங்கிணைப்பாளர் மஞ்சு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post பழவேற்காடு பகுதியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article