பழவூரில் 4 யூனிட் மணல், 2 லாரி, ஜேசிபி பறிமுதல்: 3 பேர் கைது

1 week ago 3

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் மணல் திருட்டு சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பராபுரத்தை சேர்ந்த வைகுண்டமூர்த்தி (வயது 42), கெளதம்(25), வினோத்(19) ஆகிய 3 பேரும் சேர்ந்து மிதியான்குளத்தின் அருகே ஜேசிபி மூலம் லாரியில் குளத்து மணலை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் 3 பேரையும் பழவூர் காவல் நிலையம் அழைத்து சென்றார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அனிஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வைகுண்டமூர்ததி, கெளதம், வினோத் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 4 யூனிட் குளத்து மணல், 2 லாரி மற்றும் ஒரு ஜேசிபியை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார். 

Read Entire Article