பழம்பெரும் நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

5 hours ago 3

இலங்கை சினிமாவின் ராணி என்று பலராலும் பாராட்டப்பட்டவர் நடிகை மாலினி பொன்சேகா. இவர் கிட்டதட்ட 150-க்கும் மேலான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 1978-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'பைலட் பிரேம்நாத்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

பழம்பெரும் நடிகையான மாலினி பொன்சேகா (வயது 78) உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலம் இன்றி இன்று காலை உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

Read Entire Article