பழநியில் பிளாஸ்டிக் வேட்டை: 2 டன் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி

3 weeks ago 5

 

பழநி, டிச. 28: பழநியில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 2 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பழநி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், டம்ளர்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தினார். இதனடிப்படையில் நகர்நல அலுவலர் டாக்டர் மனோஜ்குமார் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் நேற்று பழநி நகர் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நகரில் உள்ள மளிகை கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகள், பேக்கரிகளில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த சோதனையில் சுமார் 2 டன் அளவிலான பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைக்காரர்களுக்கு ரூ.28 ஆயிரம் அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

 

The post பழநியில் பிளாஸ்டிக் வேட்டை: 2 டன் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article